கொரோனா இடர்பாடுகளுக்கு மத்தியிலும் தமிழகம் பல்வேறு சாதனைகளை புரிந்துவருகிறது. அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகமே இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் ஏற்றுமதிக்கான கட்டமைப்புக்கள் நிறைந்த மாநிலமாகத் திகழ்வதாலே, தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதா ?
இந்த நிலையில் நிதி ஆயோக்கின் எக்ஸ்போர்ட் பிரிபார்ட்னஸ் இண்டக்ஸ் 2020 முதல் ஆய்வறிக்கையில் தமிழகம் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியளவின் ஏற்றுமதியின் ஆட்டோமொபைலில் 46% ஆயத்த ஆடையில் 19% மற்றும் மின்னணுவியலில் ஐந்தில் ஒரு பாகத்தையும் தமிழ்நாடு தன் பங்களிப்பாக கொடுத்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியில் 70% மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா போன்ற ஐந்து மாநிலங்களின் பங்களிப்பாகவே இருந்துவருகிறது.
தமிழகத்தில் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் ஏற்றுமதிக்கான கட்டமைப்புக்கள் நிறைந்த மாநிலமாகத் திகழ்வதாலே, மூன்றாவது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு இடங்களை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் பிடித்துள்ளன.