எடப்பாடின்னா பெரிய கொக்கா? கொந்தளிக்கும் மாவட்ட செயலாளர்கள்! அதிர்ச்சியில் தமிழக பா.ஜ.க!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்டச் செயலாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘கூட்டணிக் கட்சிகளுடன் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள்.


தேவையில்லாத பிரச்னைகளை கிளப்ப வேண்டாம்’ என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். அதன்படி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் நிர்வாகிகள் கூட்டணிக் கட்சிகளுக்குத் தேவையான ஒதுக்கீடும் செய்துகொடுத்தார்கள். ஆனால், அந்த ஒதுக்கீடு பேப்பரில் மட்டும்தான் இருக்கிறது, எங்கேயும் சீட் கிடைக்கவில்லை என்பதுதான் நிஜம் என்று கொந்தளிக்கின்றன கூட்டணிக் கட்சிகள்.

இருப்பதிலே அதிக சேதாரம் பா.ஜ.க.வுக்குத்தானாம். மேலிடத்தில் சொல்லிவிட்டதால், அந்த இடங்களில் அ.தி.மு.க. விட்டுத்தரும் என்று நம்பிக்கொண்டு இருந்தனர். ஆனால், அந்த இடங்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் களம் இறங்கிவிட்டார்கள். 

இப்படி செஞ்சா என்ன அர்த்தம், நாங்கள் நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவோம். ஒழுங்காக அ.தி.மு.க. வேட்பாளர்களை வாபஸ் வாங்கச் சொல்லுங்கள் என்று தமிழக பா.ஜ.க.வினர் மாவட்டச் செயலாளர்களிடம் பேசினார்கள்.

அதற்கு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘எடப்பாடி பழனிசாமின்னு சொன்னா நாங்க பயந்துவுடுவோமா? எடப்பாடின்னா எங்களை கொத்திட்டுப் போற கொக்கா..? போய் ஒழுங்கா காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுற வேலையைப் பாருங்க’ என்று விரட்டினார்களாம்.

முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைக்கூட அ.தி.மு.க.வினர் கண்டுகொள்ளவில்லையாம். இத்தனை வயசுக்கு அப்புறம் எனக்கு அவமானம் தேவையா என்று கண் கலங்கியிருக்கிறார். வேறு வழியில்லாமல், பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் நீங்களே வேட்புமனு தாக்கல் செய்யுங்கள் என்று ஞாயிறு அறிவிப்பு செய்துவிட்டார்களாம்.

கூட்டணியாவது மண்ணாவது...?