என்னாது ஹெச்.ராஜாதான் தமிழக பா.ஜ.க. தலைவரா..? மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஒரே ஜாலிதான்!

தமிழிசையை தெலுங்கிசையாக அனுப்பியதில் இருந்தே தமிழகத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள் செம கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சந்தோஷம் கொடுப்பதற்காகவே ஹெச்.ராஜாவை தமிழக பா.ஜ.க. தலைவராக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.


ஒருவரை தலைவர் பதவியில் இருந்து எடுப்பதற்குள் புதிய ஒருவரை தலைவராக நியமனம் செய்வதுதான் இதுவரையிலான வரலாறு. ரஜினிகாந்த் மீதான எதிர்பார்ப்பில் இத்தனை நாட்களும் தலைவர் போஸ்ட் நிரப்பாமலே வைத்திருந்தனர்.

ஆனால், பா.ஜ.க. நெருக்குதல் காரணமாக செம அப்செட்டில் இருக்கும் ரஜினிகாந்த், தலையாட்ட மறுத்துவிட்டார். அதனால் இருக்கிற ஆட்களிலேயே ஒருவரை தேர்வு செய்யவேண்டிய காட்டாயத்தில் பா.ஜ.க. இருக்கிறது.

இப்போது தலைவர் பதவிக்கான தேர்தலில் பொன்னார், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர்தான் முன்னணியில் உள்ளனர். இதில் நயினாருக்கு கட்சி மாறி இன்னமும் 3 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை என்பதால் வாய்ப்பு இல்லை.

அடுத்த பொன்னார் ஏற்கெனவே இரண்டு முறை தலைவராக இருந்துவிட்டார். வானதி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். சி.பி.ராதாகிருஷ்ணன் தேவையில்லாமல் தி.மு.க.முத்திரை குத்திக் கொண்டார். அதனால், வேறு வழியே இல்லாமல் ஹெச்.ராஜாவைத்தான் தேர்வு செய்து அறிவிக்க இருக்கிறார்களாம்.

ஸ்டார்ட் மியூசிக்.