விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் அவரது மகன் பாஜக விற்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக ஒழிக! தமிழிசை முன்னிலையில் அவர் மகன் முழக்கம்! விமான நிலையத்தில் பரபரப்பு ஏன் தெரியுமா?
வெளியூர் செல்வதற்காக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நபர் ஒருவர் பாஜக ஒழிக என்றும் தமிழக பாஜக விற்கு எதிராகவும் முழக்கமிட்டார். இதனால் பாஜக தொண்டர்கள் கோபப்பட்டு அந்த நபரை பிடித்து அழிக்க முற்பட்டனர்.
அவர்களைத் தடுத்த தமிழிசை சவுந்தரராஜன் அது தனது மகன் என்றும் குடும்ப பிரச்சினையால் தன்னைப் பழி வாங்க இப்படி செய்வதாகவும் அவரை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் கூறினார். இதனைக் கேட்டு பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாமல் அங்கிருந்த செய்தியாளர்கள் உள்ளிட்டோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் தனக்கும் தனது மூத்த மகனுக்கும் குடும்ப பிரச்சினை இருப்பதாகவும் அதனை தனது மகன் இப்படி தீர்க்க முயற்சிப்பதாகவும் சிரித்தபடியே கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். தமிழக பாஜக தலைவர் என் மகனே அவருக்கு முன்னிலையில் பாஜக விற்கு எதிராக முழக்கமிட்டனர் தமிழ் இசைக்கு தர்மசங்கட சூழலை உருவாக்கியது.