ஜூன் 2 2014 ஆம் ஆண்டு, இந்தியாவின் 29வது மாநிலமாக உதயமானது தெலுங்கானா.
தமிழிசையின் அரசியல் வாழ்க்கை அடுத்த 6 ஆண்டுகள் தான்! தெலுங்கானா கவர்னர் ஆனதன் பின்னணியில் பார்ப்பன சூழ்ச்சி..?
ஹைதராபாத் நிஜாம் என்றழைக்கப்படும் ஹைதராபாத் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியான தற்போதைய தெலுங்கானா மாநிலம். கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை எழில் கொஞ்சும் பூந்தோட்டம் ஆகும்.
வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத், மேதக் ஆகிய மாவட்டங்களாகவும் மாநிலத் தலைநகராக ஐதராபாத் இருந்து வருகிறது. கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்ந்து வளம் கொழிக்கும் தேசமாக வைத்திருக்கிறது.
அப்படி வரலாற்று புகழ் பெற்ற இந்த மாநிலத்தின் ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக மக்களுக்கு ஒரு வகையில் இது சந்தோஷமான செய்தியாக இருந்தாலும். தமிழக பாஜகவில் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக நியமிக்கவே திருமதி தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஏனெனில். தமிழகத்தில் கடந்த 6 வருடங்களில் பாஜக ஓரளவிற்கு பிரபலமானததற்கு தமிழிசை சவுந்தரராஜன் மட்டுமே காரணகர்த்தாவாக இருந்துள்ளார். தமிழக மற்ற பாஜகவினர் செய்யும் அறைகுறை பேட்டிகளையும். தேசிய பாஜக செய்து வரும் இரண்டுங்கெட்டான் விஷயமாக இருந்தாலும் அனைத்திற்கும் முட்டுக் கொடுத்து தமிழகத்தில் தாங்கள் இருக்கின்றோம் என்பதை மணிக்கொரு காட்டிக் கொண்டிருந்தவர் இவர்.
அதனாலேயே தமிழ்நாட்டில் அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மீம்ஸ் கிரியேட்டர்களின் சூப்பர் ஸ்டாராகவே வலம் வந்தவர் இவர். சமீபகாலங்களில். தமிழகத்தில் ஆதிக்க சாதிகளின் அழுத்தம் காரணமாக தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் பாரதிய ஜனதா மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால் அப்படி அவர்கள் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டால்... ஒரு முழு நேர அரசியல்வாதியின் உழைப்பை மதிக்க தெரியாத பாரதிய ஜனதா என்று மற்றவர்கள் விமர்சிக்கும் அளவிற்கு சென்றிருக்கும் தமிழக பாஜக. இந்த விஷயத்தை சரியாக கையாண்டு. தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை பதவியிலிருந்து தூக்குவும் வேண்டும்.
அதே நேரத்தில் அவர் சார்ந்த சமூகம் மற்றும் மற்ற எதிர்க்கட்சியினர் விமானங்கள் செய்ய வாய்ப்பு கொடுக்காமலும் இருக்க வேண்டும் என்பதை பாரதிய ஜனதா கட்சி லாவகமாக கையாண்டுள்ளது. அதனால்தான் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் பதவியை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிந்துள்ளனர் அரசியல் நிபுணர்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினிமா நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் அவர்கள் தமிழக மாநில பாரதிய ஜனதா தலைவரை மாற்ற வேண்டும். அந்த பதவியை தனக்கு கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில்.. தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற வேலையிலிருந்து பிராமண சமூகத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா தலைவர்கள் சரியாக தலைமை அலுவலகத்திற்கு வராமல் தங்கள் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருந்தது இங்கே கவனிக்கத்தக்கது. அதன்படி பார்த்தால் அடுத்த பாஜக தலைமைக்கு ஒரு பிராமண சமூகத்தைச் சார்ந்த ஒருவர் தலைவராக தலைவராக வர இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் ஏற்கனவே ஆரியம் திராவிடம் என்கிற ஒரு பனிப் போரில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிற இந்த வேளையில். ஒருவேளை தமிழக பாஜக தலைவராக பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால். அந்தக் கட்சி ஒரு பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் அதில் மாற்று கருத்து இல்லை.
மணியன் கலியமூர்த்தி