ஹேர் ஸ்டெய்ட்டனிங்! ஃபேஸ் பாலிஸ்! ஆளுநராகும் தமிழிசையின் அட்டகாச மேக் ஓவர்!

தமிழிசை சௌந்தராஜன் என்றாலே அடங்காமல் சிலிப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடிதான் அவரது அடையாளமாக இருந்துவந்தது.


அதை வைத்துத்தான் ஏராளமான மீம்ஸ்கள் போடப்பட்டு வந்தன. ஆனால், அவற்றை எல்லாம் மிகவும் சகஜமாக எடுத்துக்கொள்பவர் தமிழிசை என்பதுதான் நல்ல விஷயம்.

இப்போது அவர் தெலுங்கானாவுக்கு கவர்னராகப் போகிறார். அவருக்கு அத்தனை தலைவர்களும் பெருத்த ஆதரவு தெரிவித்து இருப்பதில் இருந்தே, அவர் மீது தமிழக மக்களும் கட்சியினரும் எத்தனை மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர முடியும்.

இந்த நிலையில், தமிழிசையின் ஹேர் ஸ்டைல் புதிதாக மாறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் எனப்படும் உறையில், அடங்காத தலைமுடியை அடக்கி, புதிய லுக்கிற்கு மாறியிருக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

இது ரொம்ப நல்லாத்தான் இருக்கு, ஆனா, உங்க பிராண்டை விட்டுட்டுப் போறீங்களேக்கா...