சந்தி சிரித்த தமிழிசை குடும்ப சண்டை! காரணம் இது தான்!

நேற்று சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில், தமிழிசையின் மகனும் டாக்டருமான சுகநாதன் திடீரென பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷமிட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.


அதை கண்டுகொள்ளாமல் நகர்ந்துபோனார் தமிழிசை.இப்போதுதான் ஏன் அவர் டென்ஷன் ஆனார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இதோ, தமிழிசை என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்.

``ஒரு குடும்ப நிகழ்வுக்காக நான், என் கணவர் மற்றும் மகன் மூவரும் கலந்துகொள்ள கிளம்பினோம். சென்னை வந்திருந்த உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தகவல்தான் எங்களுக்கு முன்கூட்டியே கிடைத்தது. அவரின் சென்னைப் பயணத்தில் திடீரென மாறுதல் ஏற்பட்டது. அவர் எங்கள் கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயம் வந்து, தொண்டர்களைச் சந்திப்பதாகத் திடீரென திட்டமிடப்பட்டது. அந்தத் தகவல் எனக்குக் கிடைத்ததும், `நீங்கள் முன்னால் செல்லுங்கள். துணை முதல்வர் கலந்துகொள்ளும் கட்சிப் பணியை முடித்துவிட்டு அடுத்த விமானத்தில் நான் வருகிறேன்' என என் கணவர் மற்றும் மகனிடம் சொன்னேன். 

இந்த நிகழ்வெல்லாம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது. நாங்கள் மூவரும் பயணிக்கவிருந்த விமானம் புறப்படத் தயாரானது. `போர்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சு. உன் கட்சிப் பணிதான் முக்கியமா... குடும்ப நிகழ்வுக்காக எங்களுடன் வரமாட்டியா... உனக்குக் குடும்பம் முக்கியமில்லையா...' என என் மகன் சுகநாதன் அழைத்துக்கொண்டே இருந்தான். 

பெரிதாக அவன் கோஷமெல்லாம் போடவில்லை. அது குடும்ப ரீதியான, பர்சனலான விஷயம். இந்த எமோஷனல் எல்லோருக்குமே இருப்பது இயல்புதானே! இப்படி எல்லோரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில நிகழ்வுகள் நடக்கும். இதை அரசியலாக்குவது நியாயமில்லை" என விளக்கமளித்தார் தமிழிசை.

அதெல்லாம் சரிதான். அவர் டாக்டர்ன்னு சொல்றீங்க, முதல்ல கோபத்தைப் போக்க ஒரு நல்ல டாக்டர்கிட்டே காட்டுங்க.