சிங்கம், சாமி பட இயக்குனர் ஹரி வீட்டில் நிகழ்ந்த சோகம்!

தமிழ் திரைப்பட இயக்குனர் ஆனா ஹரியின் தாய் மாரடைப்பால் தனது 81 வது வயதில் உயிரிழந்தார். இறுதி சடங்கில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்கள்.


நடிகர் சூர்யாவை வைத்து பல படங்களை இயக்கிய இயக்குனர் தான் ஹரி. இவர் படம் மிகவும் பரப்பு நிறைந்த படமாக அமைந்து இருக்கும். பல வெற்றி படங்களை கொடுத்த ஹரி, நடிகர் விஜயகுமார் மகளை திருமணம் செய்து கொண்டனர். 

தமிழில், சிங்கம், சிங்கம்2, சிங்கம்3, வேல் போன்ற பல வெற்றி படங்களை சூர்யாவுக்கு கொடுத்து உள்ளார் இயக்குனர் ஹரி. இந்நிலையில், ஹரியின் தாயார் கனி அம்மாள் இன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். 

இதற்கிடையில், கனி அம்மாளின் உடல் ஹரியின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஹரியின் தாயாரின் இறுதி சடங்களில் நடிகர் சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.