முட்டாப் பயலுக! மாங்கா மடையங்க!. ஸ்ரீகாந்த், ஆர்.ஜே.பாலாஜிக்கு எதிராக கொதிக்கும் தமிழ் ஆர்வலர்கள்!விஜய் டி.வி. நடவடிக்கை எடுக்குமா?

வாய்க்கு வருவதெல்லாம் வர்ணணை என்று தமிழை கொலை செய்து குண்டக்கமண்டக்க பேசிவரும் ஸ்ரீகாந்த், ஆர்.ஜே.பாலாஜி இருவருக்கும் தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.


தமிழ் எத்தனை இனிமையான மொழி, அதில் எப்படி வர்ணணை செய்யலாம் என்பதற்கு ராமமூர்த்தி, அப்துல் ஜஃபார் ஆகியோர் உதாரணமாக இருக்கிறார்கள். தூய தமிழ் மொழியில் அதேநேரம் ஜாலியாகவும் பேச்சு இருக்கும்.

எதிரணி என்றாலும் அந்த வீரர்களுக்கு உரிய மரியாதை கொடுத்துப் பேசுவார்கள். ஆனால், இப்போது ஆர்.ஜே.பாலாஜியும் ஸ்ரீகாந்தும் அக்ரஹாரத்துப் பாஷையில் கண்டதையும் பேசுகிறார்கள். முட்டாப் பயக, லூசுக, மாங்கா என்றெல்லாம் கண்டபடி திட்டுகிறார்கள்.

தமிழ் நாட்டில் பேசுவதால் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வீரர்களைத் தவிர மற்ற அனைவரையும் கேவலமாக கிண்டல் செய்கிறார்கள். எல்லோரையும் ஒருமையில் அழைப்பதும், கலாய்ப்பதுமாக இருக்கிறார்கள்.

உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள் என்ற நினைப்பு கொஞ்சமும் இல்லாமல், ஏதோ நகைச்சுவை நிகழ்ச்சி நடப்பது போலவே  வீரர்களை கிண்டல் செய்வதும், அவர்களாக சிரித்துக்கொள்வதும் மன்னிக்கவே முடியாத குற்றம் என்று தமிழ் ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள்.

எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல்,  விளையாட்டை  கண்டுகளிக்கும் ரசிகர்களுக்கு டெக்னிக்கலாகவும் இலகுவாகவும் விளக்குவதுதான் வர்ணணையாளரின் கடமை. ஆனால், பாலாஜி பேசுவதைக் கேட்கும் ரசிகர்களால் விளையாட்டையும் ரசிக்க முடியாமல் போகிறது. என்பதுதான் வேதனை.

விஜய் டி.வி.க்கு இனியாவது புத்தி வருமா?