கோடையில் முகத்தை மட்டுமல்ல, சருமத்தையும் காப்பாத்துங்க!!

கோடை வெயில் சுள்ளென்று அடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் சூரியனின் புற ஊதாக்கதிர்கள் உடல் மீது அதிகம் படுவதற்கு வாய்ப்பு இருப்பதால், சருமத்தைப் பாதித்து நிறத்தை மாற்றிவிடக்கூடும். இந்த நிற மாற்றத்தை சரிசெய்வதற்கு அழகுப் பொருட்களைவிட டீ நல்லமுறையில் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.


* டீ பையை சூடான நீரில் போட்டு ஊறவைத்து, பின்னர் ஆறவைக்க வேண்டும். அந்தத் தண்ணீரை துணியில் நனைத்து சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.

* டீ பையை குளிக்கும் நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தாலும் சருமத்தின் நிறம் மாறுதல் அடையும்.

சூரிய கதிர்கள் நேரடியாக உடலில் படாதபடி ஆடைகளால் மூடிக்கொன்டால், சருமத்தில் நிற மாற்றம் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.