தீவிபத்தால் இடிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட சென்னை சில்க்ஸ்! திக் திக் பீதியில் தி நகர்!

தீ விபத்து ஏற்பட்டு இடிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் சென்னை தி நகரில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது அப்பகுதிவாசிகளை பீதி அடைய வைத்துள்ளது.


கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் திநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஒன்பது மாடி கட்டிடங்களில் இயங்கி வந்த சென்னை சில்க்ஸ் தீ விபத்தால் முற்றிலும் உருக்குலைந்து போனது. 

இதனால் அந்தக் கட்டிடம் தொடர்ந்து நீடிப்பதற்கு தகுதி இல்லை என்று கூறி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினார். மேலும் உரிய அனுமதி பெறாமல் 9 மாடிக் கட்டிடத்தை சென்னை சில்க்ஸ் கட்டி உள்ளதாகவும் அப்போதே புகார் எழுந்தது.

9 மாடிகள் வரை கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் அந்தப் பகுதிக்கு தீயணைப்பு வீரர்களும் தீயணைப்பு வாகனங்களும் எளிதில் வரும் வகையிலான பாதை இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதி. ஆனால் சென்னை சில்க்ஸ் தீ விபத்தின்போது தீயணைப்பு வாகனங்கள் ஆல் கட்டிடத்தை நெருங்க முடியாத அளவிற்கு நெருக்கமான பாதைகள் இருந்தது.

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி தான் தீ விபத்திற்கு பிறகு சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. ஆனால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட அதே இடத்தில் தற்போது 11 மாடிகளுடன் the chennai silks மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போதும் கூட சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள இடத்தில் பாதைகள் குறுகலான தாகவே உள்ளது.

மீண்டும் தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்களால் அந்த இடத்தை எளிதில் நெருங்க முடியாத சூழல் தற்போது நிலவுகிறது. இதேபோல் மேலும் சில விதிமீறல்கள் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலரே சென்னை சில்க்ஸ் க்கு எதிராக புகார் அளிக்கின்றனர். 

இந்த நிலையில் அனைத்து அனுமதிகளையும் பெற்று விட்டதாக கூறி சென்னை சில்க்ஸ் கடந்த 13ம் தேதி தி நகரில் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பீதியில் இருக்கின்றனர் என்றே சொல்லலாம்.

ஏனென்றால் சென்னை சில்க்ஸ் தீவிபத்து ஏற்பட்டபோது அந்த ஏரியாவில் எந்த அளவிற்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டது என்பதை மறக்க முடியவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.