4 நாட்களாக வீட்டிலேயே எடப்பாடி முடங்கியது ஏன்! சஸ்பென்ஸ் ரிப்போர்ட்!

மோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இஃப்தார் விருந்துக்குக்கூட போகாமல், வீட்டில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. காரணம் பல் வலி என்று சொல்லப்பட்டது.


பல் வலி என்றால் வீட்டில் அமைதியாக ஓய்வு எடுப்பார்கள், நாலைந்து மணி நேரத்தில் சரியாகிவிடும் என்பதுதான் உண்மை. ஆனால், மூன்று நாட்களாகவா வீட்டுக்குள் அடைந்து கிடப்பார் எடப்பாடி? அப்படி என்னதான் நடக்கிறது என்று விசாரித்தோம். எடப்பாடியாருக்கு வேண்டப்பட்ட அமைச்சர் ஒருவர் சொன்ன தகவல் இதுதான். ‘‘இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று கோடி கோடியாக பணம் செலவழித்து விட்டார் எடப்பாடி. சட்டசபையில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டாலும், எந்த நேரத்திலும் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். 

இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி நீடித்தால்தான், தேர்தலுக்கு செலவழித்த பணத்தை எல்லாம் திரும்ப எடுக்க முடியும் என்பதால், அதற்கான பஞ்சாயத்துகள்தான் நடந்து வருகிறதாம். முதல் கட்டமாக கட்சி தாவி பணம் சம்பாதிக்கும் மனநிலையில் உள்ள எம்.எல்.ஏ.க்களை ரகசியமாக சந்தித்துப் பேசி சமாதானம் செய்து வருகிறாராம். அதேபோன்று அதிகாரிகளை அழைத்து, உடனடியாக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தினால் மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி பெற முடியும் என்று கேள்வி எழுப்பி வருகிறாராம். எம்.எல்.ஏ.க்களிடம் பேசி முடித்து, அதிகாரிகளிடமும் சாதகமான பதில் பெற்ற பிறகுதான் வீட்டைவிட்டு வெளியே வருவாராம் முதல்வர். 

ஜெயலலிதா மாதிரி வீட்டையே கோட்டையாக மாற்றிவிட்ட எடப்பாடியை அதிகாரிகளே ஆச்சர்யமாகத்தான் பார்க்கிறார்கள். ஏனென்றால், அவர் அழைக்காமல் சென்று பார்க்க முடியாதே...