ஆந்திரா வேண்டாம்! கேரளா தான் வேண்டும்! அடம்பிடிக்கும் சுஷ்மா!

ஆந்திர மாநில ஆளுநர் பதவியை வேண்டாம் என்று சுஷ்மா மறுத்ததன் பின்னணியில் தற்போது வெளியாகியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத சுஷ்மா ஸ்வராஜ் மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் சுஷ்மா ஸ்வராஜை ஆந்திர மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக நேற்று பரபரப்பு தகவல் வெளியானது. ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் சுஷ்மா சுவராஜுக்கு வாழ்த்துக்கள் என்று மத்திய அமைச்சர் ஒருவரும் ட்வீட் செய்திருந்தார்.

ஆனால் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட இருப்பதாக வெளியான தகவல் தவறானது என்று சுஷ்மா சுவராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் தான் ஆளுநர் பதவியை கேட்கவில்லை என்றோ தான் எந்த மாநிலத்திற்கும் ஆளுநராக போவதில்லை என்றும் சுஷ்மா தரப்பில் தெரிவிக்கப் படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது ஆந்திர மாநில ஆளுநராக ஆத்மாவிற்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

கேரளா, காஷ்மீர் போன்ற நல்ல காலநிலை நிலவும் மாநிலங்களில் ஏதேனும் ஒன்றை ஆளுநராக வேண்டும் என்பதே சுஷ்மாவின் விருப்பம் என்று சொல்கிறார்கள். ஆனால் கேரளா மற்றும் காஷ்மீர் ஆகிய இரண்டு மாநிலங்களும் அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாஜக தலைவர் அமித் ஷா கருதுகிறார்.

எனவே அங்கு தன் பேச்சுக்கு கட்டுப்பட்டு இருக்கக்கூடியவர்கள் ஆளுநராக இருந்தால் தான் சரியாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார். இதனால்தான் ஆந்திராவில் ஆளுனராக சுஷ்மாவை நியமிக்க அமித் ஷா மோடி முடிவெடுத்ததாகவும் ஆனால் அதனை ஏற்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.