பூரி தேரோட்டத்தை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி! ஏன் நம்மூர் திருவிழாக்களை மட்டும் நடத்த முடியாது?

பூரி தேரோட்டத்தை சட்டத்துக்கு உட்பட்ட வகையில் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. இந்த நிலையில், ஏன் நம்மூர் திருவிழாக்களை மட்டும் நடத்த முடியாது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார், பத்திரிகையாளர் கதிர்வேல்.


பூரியில் கொரோனா பரவல். ஊரடங்கு காரணத்தால் தேரோட்டம் நடத்த முடியாத நிலையில், இந்து அமைப்புகள் வழக்கு போட்டாங்க. ஒடிசா ஐகோர்ட் முடியாதுனு சொல்லிருச்சு. சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் பண்ணாங்க. அவசரமா எடுத்து விசாரிக்கணும்னு மத்திய அரசு கேட்டுது. தலைமை நீதிபதியும் 2 நீதிபதிகளும் விசாரிச்சாங்க.

“கொரோனா விதிகளுக்கு கட்டுப்பட்டு தேரோட்டம் நடத்துவீங்ளா?”னு ஜட்ஜஸ் கேட்டாங்க. “அப்டி உத்தரவாதம் தர முடியாதுங்க. பெருசா கூட்டம் திரண்டுதுன்னா யார் பேச்சையும் கேக்க மாட்டாங்க. ரூல்ச மதிக்க மாட்டாங்க”னு ஒடிசா அரசு வக்கீல் சொன்னார்.

“ஆமா. தேரோட்டம்னா தாறுமாறா கூட்டம் வரும். கூட்டம் சேந்தா என்ன ஆகும்னு பாத்துகிட்டு இருக்கோம். அதனால ஐகோர்ட் விதிச்ச தடைய நீக்க முடியாது”னு சொல்லிட்டாங்க. 

முதல்வர் நவீன் பட்நயக் அப்பாடா நிம்மதி..ன்னார். அமித் ஷா கால் வந்துது. ”தேரோட்ட கமிட்டி ரூல்ஸ் படி நடத்றதா சொல்லுது. உங்களுக்கு என்ன வந்துது?”னு அமித் கேட்டார். அப்றம் என்ன சொன்னாரோ, நவீன் தலை ஆட்டினார்.

மறுபடி சுப்ரீம் கோர்ட் போனாங்க. அதே ஜட்ஜுங்க. “200, 250 வருசம் முன்னாடி இப்டி ஒரு தேரோட்டம் நடந்த பிறகுதான் காலராவோ பிளேக்கோ மின்னல் வேகத்ல பரவி எக்கச்சக்கமா செத்து போனாங்க. அதனால, இந்த வருசம் வேணாம்னு சொன்னோம். ஆனா, விதிகள்படி நடத்றோம்னு இப்ப உறுதி குடுக்றீங்க. அதனால தடைய நீக்றோம்”னு அறிவிச்சாங்க. 

இது சாத்தியம்னு தெரிஞ்சா சித்திரை திருவிழா நடத்தணும்னு மதுர காரங்க கேஸ் போட்ருக்கலாம். சட்டம்னா எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்கணும்னு சொல்லுவாங்க. இருக்காங்றது வேற விசயம். மத்த மத பண்டிகைக்கும் கேப்பாங்க. பூரிக்கு பெர்மிசன் குடுத்தத பாத்துட்டு குஜராத் கோயிலும் சுப்ரீம் கோர்ட்டுக்கு போயிருக்கு. அநேகமா ஒடிசா கதைதான் அங்கயும் நடக்கும்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்ல நாள கழிச்சு ஆனி திருவிழா ஆரம்பம். ஜூலை 3 ஆம் தேதி தேரோட்டம். வடக்க பூரி தேரோட்டம் ஃபேமஸ்னா தென் தமிழ்நாட்ல திருநெல்வேலி தேர் திருவிழா ஃபேமஸ். 515 வருசமா நடந்துகிட்டு இருக்கு. 3 மாவட்டத்துல லீவு விடுவாங்க. கோர்ட்டுக்கு போகாமலே அரசு பெர்மிசன் குடுத்துரும்னு எங்கூராளுக நம்புறாக. எடப்பாடி என்ன சொல்றார்னு பாக்கணும்.