தி.மு.க.வில் துர்கா ஸ்டாலினுக்கும் கோஷ்டி வந்தாச்சு..! அழகிரி, கனிமொழி என்ன சொல்றீங்க?

கோயில், குளம் என்று சுற்றிக்கொண்டிருந்த துர்கா ஸ்டாலின், தனக்கென ஒரு கும்பலை வைத்துக்கொண்டு, கட்சிப் பணிகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டார் என்று தி.மு.க.வினர் வருத்தப்படுகின்றனர்.


இந்த விவகாரம் நாகை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ள துர்கா ஸ்டாலின் வீட்டுக்கு எதிரே திடீரென தி.மு.க.வினர் கூடி போராட்டம் நடத்தியதும்தான் வெளியே வந்துள்ளது. அதாவது சீர்காழி ஒன்றிய சேர்மன் பதவிக்கு, தி.மு.க. கவுன்சிலர் ரவியின் மனைவி மதுமிதாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம்.

ஆனால், சம்பந்தமே இல்லாமல் வேறு ஒருவருக்கு துர்கா ஸ்டாலின் ஆதரவு கொடுத்தாராம். அதனால், ரவியின் ஆதரவாளர்கள் திருவெண்காட்டில் உள்ள துர்கா ஸ்டாலின் வீட்டுக்கு முன் ஒன்றுகூடி, ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

அவர்கள் ஏன் திருவெண்காட்டில் போராட்டம் நடத்தினார்கள் என்று கேட்டால், அங்கு இருக்கும் துர்காவின் சகோதரரும் உட்கட்சி பிரச்னையில் தலையிடுகிறாராம். இந்த விவகாரத்தை தலைமைக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடத்தினார்களாம்.

இந்த விவகாரம் அறிந்து அழகிரியும், கனிமொழியும் கொதித்துப்போய் இருக்கிறார்கள். ஏனென்றால், தனக்குப்பின்னே யாரும் வர மாட்டார்கள் என்று ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இப்போது உதயநிதி, சபரீசன், துர்கா என்று வரிசையாக உள்ளே நுழையவே, இனி தங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று டென்ஷனில் இருக்கிறார்கள்.

நீங்க ஸ்டாலின் வீட்டுக்கு முன்பு போராட்டம் நடத்தலாமே?