திருநெல்வேலியில் மேயர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டபோது, அவருடைய பணிப்பெண் மாரியம்மாளும் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை மாரியம்மாளுக்கு சன் டி.வி. உதவி செய்யலையா..? என்ன அநியாயம்டா இது..?

மாரியம்மாளுக்கு கணவரும் இல்லை என்பதால், அவரது மூன்று பெண் பிள்ளைகளும் அனாதரவாக தெருவில் நின்றனர். திருநெல்வேலி வரைக்கும் போன ஸ்டாலின், அந்த அனாதைக் குழந்தைகளைப் பார்க்காமல் திரும்பினார். அது கடும் விமர்சனத்தை உருவாக்கவே, தி.மு.க. சார்பில் அந்தக் குழந்தைகளுக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அந்த மூன்று குழந்தைகளின் படிப்பையும் சன் டி.வி. நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக செய்தி இணையத்தில் பரவியது.
ஆனால், அதுகுறித்து சன் தொலைக்காட்சியில் எந்த செய்தியும் வரவில்லை. இந்த நிலையில் இப்போதுதான் உண்மை வெளியே வந்திருக்கிறது. மாரியம்மாளுக்கு 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 8 ம் வகுப்பு பயிலும் மூன்று மகள்கள் உள்ளனர். அவர்களை திருநெல்வேலி என்ஜிஓ காலனியில் வசிக்கும் இன்னொசென்ட் என்பவர் நேற்று முன்தினம் சந்தித்தார். அவர் தாம் நடத்திவரும் ‛சன் மேரி டிரஸ்ட்’ மூலம் மூவரின் படிப்பிற்கு ஆகும் முழுச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இந்த சன்மேரி டிரஸ்ட்க்கும் சன் டிவி டிரஸ்ட்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், இதை தவறாக புரிந்துகொண்ட சிலர், சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் உதவியதாக தகவல் பகிர்ந்து வருகின்றனர். அதென்ன சன்மேரி டிரஸ்ட் என விசாரித்த போது கண்ணீர் மல்கும் தகவல் கிடைத்தது.
என்ஜிஓ காலனியில் வசிக்கும் இன்னொசென்டின் சகோதரியும், அவரது கணவரும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் பலியாயினர். அவர்களின் இரண்டு குழந்தைகளை தாய்மாமனான இன்னசென்ட் கவனித்துவருகிறார். சகோதரி மற்றும் அவரது கணவர் பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு டிரஸ்ட் ஏற்படுத்தி உதவிவருகிறார். அவர்தான் மாரியம்மாளின் குழந்தைகளுக்கும் உதவ முன்வந்துள்ளார். ஆனால் அதற்காக எந்த விளம்பரங்களும் தேடிக்கொண்டதில்லை.
அட, நாங்க உதவி செய்யவில்லை என்றாவது சன் டி.வி. சொல்லியிருக்கலாம்.