சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சன் ரைசர்ஸ் புள்ளி பட்டியலில் டாப்! டெல்லி அணியை தெறிக்கவிட்ட SRH!
முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் 129 ரன்களை மட்டுமே எடுத்தது. சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் ரன்களை சேர்க்க முடியாமல் அவுட் ஆகி வெளியேறினர். அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் பொறுப்புடன் விளையாடி 43 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.சன் ரைசர்ஸ் அணியின் நபி,புவனேஸ்வர் ,சித்தார்த் கவுல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பரிஸ்டோவ் சிறப்பாக விளையாடி எதிரணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். இவர் 28 பந்துகளில் 48 ரன்களை சேர்த்து வெளியேறினார். பரிஸ்டோவ்வை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அந்த அணியால் இந்த எளிதான இலக்கை எட்ட 18.3 ஓவர்கள் எடுத்துக்கொண்டனர். இதனால் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சன் ரைசேர்ஸ் அணி இது வரை விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளை வென்று 6 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.