முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து ஹார்மோன் பிரச்சனை வரை ஒவ்வொரு நாளும் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் பெண்கள்.
பெண்களே உங்கள் ஆரோக்கியத்தை மேன்படுத்தும் உணவுகளின் மேல் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும்!
உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் மஞ்சளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். மஞ்சளில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. சிறுதளவு மஞ்சளை சூடான பாலில் கலந்து தினமும் இரவு பெண்கள் படுப்பதற்கு முன்பு குடித்து வரலாம். இது உங்களுக்கு செரிமானம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
கொண்டைக்கடலையில் இரும்புச் சத்து அதிகளவில் உள்ளது. எனவே மாதவிடாய் இரத்த போக்கால் இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் கொண்டைக்கடலையை உணவில் சேர்த்து வரலாம். மேலும் இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது.
உடல் ஆரோக்கித்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்துகள் இவை மூன்றும் தரக்கூடியவை பருப்பு வகைகள். எனவே தான் சைவ பிரியர்கள் உணவில் அதிகமாக பருப்பில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதில் புரதம் அதிகமாக இருப்பதால் வளரும் பெண் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் இதில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் பிறப்பு குறைபாட்டை தடுக்க உதவி செய்கிறது.