நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் 2 பேர் அப்ரூவர் ஆகியுள்ளனர்.
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் அதிரடி திருப்பம்! போலீசாரிடம் அப்ரூவரான 2 பேர்!
இந்த வழக்கில் இடைத் தரகர்களாக செயல்பட்ட பாலாமணி, பாண்டியன் ஆகியோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தைகள் விற்பனைக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டதை ஒப்புக் கொண்டனர்.
மேலும் யார் குழந்தையை யாருக்கு விற்பனை செய்தனர் என்பதையும் பாலாமணி, பாண்டியன் விசாரணையில் கக்கினர். அதுமட்டும் இல்லாமல் அரசுத்தரப்பு சாட்சிகளாகவும் அவர்கள் சம்மதித்தனர். இதனை அடுத்து அவர்களை அப்ரூவர்களாக்கி போலீசார் வழக்கை துரிதப்படுத்தியுள்ளனர்.
இரண்டு பேர் அப்ரூவர் ஆகியுள்ள நிலையில் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.