அசோக் லேலண்ட் விற்பனையில் 70 சதவீதம் வீழ்ச்சி! திக் திக் மனநிலையில் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள்!

இந்தியாவில் கார் விற்பனையில் தேக்கம் என்றதும்,நிதியமைச்சர் ஒரு யோசனை சொன்னார்.


பழைய கார்களை விற்றுவிட்டு புதுக் கார்கள் வாங்களாமே என்று.இப்போது கார் விற்பனையை விட.ஹெவி கமர்ஷியல் வெகிக்கிள் என்று அழைக்கப்படும் லாரி,பஸ் விற்பனை கிட்டத்தட்ட படுத்தே விட்டது. இந்திய கனரக வாகன உற்பத்தியில் டாட்டா மோட்டார்ஸ்,அசோக் லேலண்ட்,வோல்வோ எய்ச்சர்,மகிந்தரா அண்ட் மகிந்தரா ஆகியவை முன்னணி வகிக்கின்றன.

நான்கும் போட்டி போட்டுக்கு கொண்டு 9லட்சம் வரை ( 49 டன்னுக்கு மேற்பட்ட சுமை ஏற்றும் ட்ரக்குகளுக்கு) தள்ளுபடிகள் அறிவித்தும் 59.5 சதவீதம் விற்பனை சரிந்திருக்கிறது.இந்த சரிவில் அதிகம் பாதிக்கபட்டு இருப்பது அசோக் லேலண்ட் நிறுவனம்தான்.2018 ஆகஸ்ட்டில் 11,135 யூனிட்டுகளை விற்றிருந்த அசோக் லேலண்ட் இந்த ஆகஸ்ட்டில் வெறும் 3,336 யூனிட்டுகளை மட்டுமே விற்றிருக்கிறது.

அதாவது 70% வீழ்ச்சி.டாட்டா 58%,வோல்வோ 41.7%,மகிந்தரா 69% சரிவை சந்தித்திருக்கின்றன. அடுத்த இரண்டுமாத காலமும் இந்தியாவில் பண்டிகைக் காலம் என்பதால் விற்பனை கூடலாம் என்று இந்தக் கம்பெனிகள் எதிர் பார்க்கின்றன.அதை விட்டால் 2020 ஏப்ரல் 1ல் அறிமுகப்போகும் வாகனங்களுக்கான புதிய சுற்றுச்சூழல் அளவீடு BSVI அமலாகும் வரைக் காத்திருக்க வேண்டும்.

இந்திய பொருளாதார வளர்ச்சி 5% ஆகிவிட்டதை விட கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உற்பத்தித் துறை வளர்ச்சி 0.06% ஆக குறைந்திருப்பது அச்சமூட்டுகிறது.குதித்து ஏறும் எரிபொருள் விலையும்,கமர்சியல் வாகனங்களுக்கான டோல் கேட் கட்டனங்களும் ஒரு காரணம் என பார்க்கப்படுகிறது.