முதல் நாள் பட்டா கத்தியுடன் வெறியாட்டம்! மறுநாள் கைகளில் மாவு கட்டு! சுளுக்கெடுத்த போலீஸ்!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஓடும் பேருந்தில் பட்டாக்கத்தி, அரிவாளுடன் செய்த அட்டூழியம் மிகவும் கொடுமையானது என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.


ஆனால், அந்த மாணவர்களுக்கு கைகள் உடைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியைக் கொடுக்கிறது. செயின் திருடர்கள், சிறுமிகளை தொட்டவர்கள் எல்லாம் பாத்ரூமில்  வழுக்கிவிழுந்து வலது கையை உடைத்துக்கொண்டது போலவே, இவர்களும் வழுக்கி விழுந்திருக்கிறார்கள். போலீஸ் காவலில் இருக்கும்போது, மாணவர்களுக்கு என்ன நடந்தாலும் அதற்கு காவல் துறைதானே பொறுப்பு.

மாணவர்களுக்குள் மோதல் என்பது எல்லையைத் தாண்டுவதும், பொதுமக்களுக்கு அச்சம் ஊட்டுவதும் நிச்சயம் தண்டனைக்கு உரிய குற்றம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்கு இப்படி ஒரு வாழ்நாள் தண்டனை தேவையா? இன்று காவல் துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. தவறு செய்த நபர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்கள்.

மூன்று நபர்களை போக்குவரத்து சீர்செய்யும் பணியில் இறக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. இப்படிப்பட்ட தண்டனைதான் குற்றவாளிகளை உருவாக்காமல் தடுத்து நிறுத்தும். காவல் துறை யின் அதிகாரம் எல்லை மீறக்கூடாது என்பதுதான் நம் எண்ணம்... மாணவர்களே ஜாக்கிரதையாக இருங்கள்.