3 வயது குழந்தையை கவ்விச் சென்ற நாய்கள்! பிறகு அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் ஒரு சிறுவனை தெருநாய்கள் ஒன்றுகூடி கடித்த சம்பவம் நடந்துள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள சிவ் வாலா நாத் நகர் பகுதியில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிய வண்ணம் இருந்தனர். அங்கு தெரு நாய்கள் பலரை அச்சுறுத்தி வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 3 வயது சிறுவனை கடித்து குதறி உள்ளதால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

சம்பவத்தன்று 3 வயது சிறுவன் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது 5 தெரு நாய்கள் அச்சிறுவனை சூழ்ந்து கொண்டன. கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் மீது பாய்ந்து ஐந்து முறை கடித்து அந்த நாய்கள் சதுரம் சிறுவனை இழுத்துச் சென்றன. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அவனது பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் திரண்டு நாய்களை விரட்டி அடித்து சிறுவனை மீட்டனர்.

தற்போது அவனுக்கு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு செல்லவே இரண்டு நாட்களுக்குள் அப்பகுதியில் இருந்து அகற்றப்படும் என்று உறுதி கூறியுள்ளார். இதனிடையே சிறுவனை நாய்கள் கடித்து குதறியதில் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன.