இந்தியை தமிழ்நாட்டுக்குள் திணிக்கிறார்கள் என்று ஆளுக்கு ஆள் கொந்தளிக்கும் நேரத்தில், ‘இது கட்டாயம் இல்லை’ என்று பின்வாங்கிவிட்டது மத்திய அரசு.
மீண்டும் குலக்கல்வி திட்டமா? மத்திய அரசை எதிர்க்கத் தயாராகும் சமூக அமைப்புகள்!
ஆனால், வேறு ஒரு வகையில் மக்களின் கலாசாரத்துடன் விளையாடுகிறது என்கிறது மக்கள் அதிகாரம் அமைப்பு. ஆம், குலக்கல்வியைக் கொண்டுவரும் உத்தரவு இது என்கிறார்கள். ஆம், அடிப்படைக் கல்வியிலேயே வாழ்வாதாரக் கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.
ஆறிலிருந்து எட்டாவது வரையிலான வகுப்புகள் ஏதேனும் ஒரு ஆண்டில் தோட்டம் போடுதல், தச்சு, மண்பாண்டம் செய்தல், உலோக வேலை, மின் பழுது நீக்கல் போன்ற வேலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உறுதிபடி பரிந்துரைத்துள்ளது.
இது அப்பட்டமான குலக்கல்வித் திட்டம். என்று சொல்கிறார்கள். ஏனென்றால், கைத் தொழில் ஒன்றை கற்றுக்கொள்ளும்போது, தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து படிக்கும் விருப்பம் இன்றி, கைத்தொழில் காட்டும் வழியில் சென்று பணம் சம்பாதிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால் மேல் வகுப்பு மாணவர்கள் மட்டுமே தொடர்ந்து படிப்பார்கள்.
குறிப்பாக சொல்வது என்றால், உயர் ஜாதியினர் படிக்கவும், தாழ்ந்த ஜாதியினர் படிப்பதை தடுத்து நிறுத்தவும்தான் இந்த சட்டம் உதவும் என்கிறார்கள். உஷாரா இருங்கப்பு.