கொரோனா இங்கேயும் இருக்கிறது, கொஞ்சம் ஜாக்கிரதையா டீல் பண்ணுங்க.

கையைக் கழுவிவிட்டால் போதும், மாஸ்க் போட்டுக்கொண்டு வீட்டில் தனியே இருந்தால் போதும், கொரோனா தொந்தரவில் இருந்து தப்பிவிடலாம் என்று நினைக்க வேண்டும். கோரோனா வைரஸ் வேறு எதன் மூலம் பரவலாம் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.


பால் பாக்கெட், லிஃப்ட் பட்டன், காலிங் பெல், பேப்பர், ரூபாய் நோட்டு, கார் கதவு போன்ற இடங்களில் எல்லாம் கிட்டத்தட்ட 9 மணி நேரம் வரையிலும் கொரானா கிருமிகள் உயிர் வாழ்வதற்கு வாய்ப்பு உண்டு. குப்பைகள் அகற்றுவதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள். குறிப்பாக வீட்டுப் பணியாளர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதற்கு முன்னரே சோதித்து விடுங்கள்.

வீட்டுப் பணியாளர்களுக்கும் லீவு விடுவதுதான் உண்மையில் சுகாதாரமானது. பச்சை காய்கறி மற்றும் பழங்களிலும் கிருமிகள் தங்குவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல், கடைகளில் கவுண்டர்களில் கை வைத்து பேசுவது, கதவு கைப்பிடிகளைத் தொடுவது போன்றவையும் கொரோனா தங்கும் இடங்களே.

ஊபர், ஆட்டோ, ஏ.டி.எம். போன்றவற்றையும் முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். உறவினர்கள், நண்பர்களிடமும் போனில் பேசினாலே போதும். யாரையும் வீட்டில் போய் சந்தித்து தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவதும் வேண்டாம். அவர்களை வீட்டுக்கு வரவழைப்பதும் வேண்டாம். இதோ, கொஞ்ச நாட்கள் மட்டும் இதனை கடைப்பிடித்தால் போதும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.