தேசியத் தலைவர்களை மட்டும் கவனித்தால் போதுமா? கட்சியில் சேர்ந்த நடிகையை படுத்தி எடுக்கும் மாநில தலைவர்கள்!

அண்மையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சியில் இணைந்த பிரபல நடிகை அதன் பிறகு கட்சி நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்ததன் காரணம் அந்த மேட்டர் தானாம்.


ஆஜானுபாகுவான உடல் தோற்றத்தால் நடிகை இளசுகள் மத்தியில் மிகப்பிரபலம். தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு என்று புதிய உச்சத்தை வகுத்தவர் இந்த நடிகை தான். நாயகியாக அறிமுகமாகி பிறகு கவர்ச்சி நடிகையாகி ஒரு கட்டத்தில் டெலிவிசன் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமானவர். 

ரசிகர்களை செல்லமாக இவர் அழைக்க பயன்படுத்தும் வார்த்தை தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. மார்க்கெட் போன நிலையில் ஒரு கட்சியில் சேர்ந்து குப்பை கொட்டி வந்தார். ஆனால் அந்த கட்சியிலேயே குழாயடி சண்டைகள் நடந்து வந்த நிலையில் திருமணமாகி செட்டில் ஆனார்.

ஆனால் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதால் திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். தனது பிரமாண்ட அழகுகள் அப்படியே தெரியும் படி புகைப்படம் எடுத்து வெளியிட்டும் வாய்ப்பு மட்டும் நடிகைக்கு கிடைக்கவில்லை.

இதனால் மீண்டும் அரசியல் பக்கம் போகலாம் என்று முடிவெடுத்த நடிகைக்கு அவர் இருந்த கட்சி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தேசிய அளவில் பிரபலமான ஒரு கட்சியில் சேர்ந்த அவரை இங்குள்ள மாநில நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை. எந்த நிகழ்ச்சிக்கும் அவரை அழைப்பது இல்லை.

என்ன என்று நடிக விசாரித்த போது, தேசிய அளவிலான தலைவரை சந்தித்து அந்த நடிகை கட்சியில் சேர்ந்தது தான் பிரச்சனைக்கு காரணமா? அவர்களை மட்டும் சந்தித்தால் போதுமா நாங்கள் எல்லாம் இங்கு எதற்கு இருக்கிறோம் என்று லோக்கல் தலைவர்கள் கேட்க? எத்தனை பேர், என்று கேட்டு விழி பிதுங்கி நிற்கிறாராம் நம்ம பிரமாண்டம்.