தமிழர்கள் புத்தாண்டில் மறந்துபோன ஒரு பழக்கம் அடுப்பு மூடுவது ஆகும். முந்தைய காலத்தில் புது அடுப்பு வாங்கிவந்து, அதைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்போது எல்லோருடைய வீட்டிலும் எலக்ட்ரிக் குக்கர்தான் இருக்கிறது. ஆனாலும் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாட முடியும்.
புத்தாண்டில் புதிதாக சமையலைத் தொடங்குங்கள்! வாழ்க்கை சுகமாய் மாறும்!.

ஆம், முதல் நாள் இரவில் அடுப்பு வேலைகளை முழுமையாக முடித்து, கழுவி வைத்துவிடுங்கள். ஒரு புது பானை வாங்கமுடிந்தால் நல்லது. அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்து அனைவரும் குளித்து, தூய ஆடை அணிந்துகொள்ளவும்.சூரியன் உதிக்கும்போது அடுப்பில் பால் பொங்கவைத்து சர்க்கரை போட்டுக்கொள்ளவும்.. ஒரு கிண்ணத்தில் பால் எடுத்து சூரிய பகவானுக்க்கு படைக்கவும். அதன்பிறகு வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்களுக்கு முதலில் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
முதியவர்கள் இல்லையென்றால், இருப்பதிலேயே சிறிய வயதினருக்கு முதலில் கொடுத்து அன்புசெலுத்தவும். அதன்பிறகே மற்றவர்கள் குடிக்க வேண்டும். இன்றைய தினத்தில் ஏதேனும் புதிய பணிகள் தொடங்குவது மிகவும் நல்லது. புதிய தொழில், பெண் பார்க்கும் படலம், புதிய படிப்பு போன்றவற்றை இன்று தொடங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
இன்றைய தினம் கோயிலுக்குச் சென்று மனமார வழிபாட்டால், வேண்டியன எல்லாம் கிடைக்கும்.