ஆட்சி கவிழ்ப்பு! ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு! திமுகவின் முக்கிய அறிவிப்பு!

நம்பிக்கை இல்லா தீர்மானம் விவகாரத்தில் அமைதி காத்து வந்த மு க ஸ்டாலின் தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார்.


நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு சட்டப் பேரவைச் செயலகத்தில் பரிசீலனையில் உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு க ஸ்டாலின் சட்டப் பேரவை கூடியதும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முடிவிலிருந்து பின் வாங்கி விட்டதாக பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒற்றை தலைமை என்று கூறி அதிமுகவில் மோதல் வெடித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி தங்கள் வசம் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் மூலமாக ஆட்சியை கவிழ்க்க திமுக தரப்பு வியூகம் வகுத்து வருகிறது.

இதற்காகவே சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று நேற்று மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று அறிக்கை விடும் அளவிற்கு தற்போது தமிழகத்தில் எந்த அவசரமும் இல்லை. ஆனால் குடிநீர் பிரச்சனையை காரணம் காட்டி சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உண்மையில் இந்த சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற ஸ்டாலின் கோரிக்கை தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க இல்லையா நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அதிமுக அரசை கவிழ்க்கவாம்.

இதனால்தான் அவசர அவசரமாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு எடப்பாடி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஏற்பாடு செய்துள்ளனர். சட்டப்பேரவை கூட்டப்படும் பட்சத்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சியில் திமுக ஈடுபடும் என்று கூறப்படுகிறது.