ஸ்டாலின் புலம்புகிறார்! வைகோ ஜால்ரா போடுகிறார்! பிரச்சாரத்தில் தெறிக்க விடும் எடப்பாடி!

ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், நினைத்ததையெல்லாம் பேசிவருகிறார்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாடினார்.


கடலூர் நாடாளுமன்றத்தொகுதி அ.தி.மு.ககூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் பிரசாரம்செய்தார். அப்போது,  எதிர்க்கட்சியான தி.மு.கதலைவர் ஸ்டாலின், செல்கின்ற இடத்தில் எல்லாம் பொய்யான தகவலைத் தெரிவித்துவருகிறார்.

பொய்யான செய்தியைச் சொல்லிச்சொல்லி மக்களிடத்தில் குழப்பத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறார். தேர்தல் அறிக்கையில் இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என அறிவித்திருக்கிறார். நான் கேட்கிறேன், ஏற்கெனவே நீங்கள் நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தீர்களே... நீங்கள் எந்தத்தேர்தல் அறிக்கையையாவது நிறைவேற்றியிருக்கிறீங்களா என்றால் கிடையாது.  

இது மெகா கூட்டணி, வலிமையான கூட்டணி. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.கதலைவர்களைப் பற்றி பேசுகிறார், கூட்டணி கட்சித்தலைவர் ராமதாஸைப் பற்றிப் பேசுகிறார். இப்படி நினைத்ததையெல்லாம் பேசிப் புலம்பிவருகிறார். அவரைப் புலம்ப விட்டாச்சி.  ம.தி.மு.க தலைவர் வைகோ அப்படிதான் போற இடத்தில் எல்லாம் பேசிவருகிறார். நீங்கள் முதலில் கட்சிவைத்து நடத்துங்கள், கட்சியை அடமானம் வைக்காதீர்கள்.

தி.மு.க-வில் இருந்து பிரிந்து போய் ம.தி.மு.க-வைஆரம்பித்தார்.பின்னர், எந்தக் கட்சியில் இருந்து பிரிந்தாரோ அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அது கட்சியா?. இப்ப என்ன சின்னத்தில் போட்டியிடுகிறீர்கள். தி.மு.க. சின்னத்தில்.ம.தி.மு.க-விற்கு ஒரு சின்னம் இருக்கிறது. அதில் போட்டியிடாமல் தி.மு.கசின்னத்தில் போட்டியிடுவது,அந்தக் கட்சி கலப்படக் கட்சியாகிவிட்டது. அவர் வந்து நம் கூட்டணியைப் பற்றிபேசுகிறார். முதலில் உங்கள் கட்சியைக் காப்பாற்றப் பாருங்கள், பிறகு அடுத்த கட்சியைப் பற்றிபேசலாம்.

வைகோ எப்ப பாத்தாலும் தமிழ் ஈழம் அழிக்கிறது, அதற்குக் காரணம் காங்கிரஸ்.அதற்குத் துணைபோகும் தி.மு.கஎன்று பேசியவர். இன்று பதவிக்காக ஜால்ரா போடுகிறார். இவர்கள், பச்சோந்தி போல் நிறத்தை மாற்றி கூட்டணி அமைத்துள்ளனர்.