வேலூர் தேர்தல் வெற்றி விசித்திரமான பார்வையைக் கொடுத்திருக்கிறது. தோல்வி அடைந்த அ.தி.மு.க.வும், நாங்கள் வென்றுவிட்டோம். எங்களுடைய வாக்குவங்கி நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று கொண்டாடுகிறார்கள்.
வேலூர் ஸ்டாலின் வெற்றிக் கணக்கு கொஞ்சம் புதுசா இருக்கே!

இந்த நிலையில், தி.மு.க. ஆதரவு ஐ.டி. பார்ட்டிகள் புதுவிதமான கணக்கை உலவவிட்டு, ஸ்டாலின்தான் கெத்து என்கிறார்கள். அது என்னவென பார்க்கலாம். கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க - 3,83,719 வாக்குகள் பெற்றது. இரண்டாம் இடம் பெற்ற பா.ஜ.க..வேட்பாளர் ஏ.சி.சண்முகம். -3,24,326 வாக்குகள் பெற்றார். மூன்றாம் இடம் பெற்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர் 2,05,896 வாக்குகள் பெற்றார்.
இந்தக் கணக்குப் படி பார்த்தால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த காரணத்தால் ஏ.சி.சண்முகம் பெற்றிருக்க வேண்டிய வாக்குகள். 7,08,145. ஆனால் பெற்றது. -4,77,199 மட்டும்தான். ஆக அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி இழந்தது 2,30,946 வாக்குகள்.
கடந்த தேர்தலில் 2,05,896 வாக்குகள் பெற்ற தி.மு.க கூட்டணி, இப்போது பெற்றிருப்பது 4,85,340 வாக்குகள். அதாவது 2,79,444 வாக்குகள் தி.மு.க. கூடுதலாகப் பெற்றுள்ளது. இப்போது சொல்லுங்கள், தி.மு.க. குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலா வெற்றி பெற்றது என்று கேட்கிறது ஸ்டாலின் டீம்? ம்.. இப்படி பேசிப்பேசியேதானப்பா ஏமாத்துனீங்க.