கமல்ஹாசனுக்கு நூல் விடுகிறாரா ஸ்டாலின்..? பிறந்த நாள் வாழ்த்து சர்ச்சை

வழக்கமாகவே கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்லி வருகிறார். ஆனால், இந்த ஆண்டு கூடுதல் அழுத்தம் கொடுத்து வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். ஆகவே நூல் விடுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.


இன்று கமல்ஹாசன் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின். பின்னர், முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞரால் 'கலைஞானி' என்று போற்றப்பட்டவரும் - எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரியவருமான நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! நலமுடனும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டணி அழைப்புதானா இது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.