ரூ.10 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு! மா.சுப்ரமணியம் மீது கொல காண்டில் ஸ்டாலின்!

மக்கள் மத்தியில் தி.மு.க.வின் பெயரைக் கெடுக்கவென்றே சிலர் அவ்வப்போது தலையெடுப்பார்கள்.


அதில் முன்னாள் சென்னை மேயரும் இன்றைய எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியம் முக்கியமானவர். அவர் மேயராக பதவி வகித்தபோது, தெனாவெட்டாக செய்த ஒரு அபகரிப்பு காரியம் இப்போது அவரது தி.மு.க. உறுப்பினர் பதவியை காவு கேட்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. இவர் செய்த காரியம் என்னவென்று கேட்டால் அதிர்ச்சிகரமாக இருக்கும். பதவி இருக்கும் தைரியத்தில் எப்படியெல்லாம் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள்?

கிண்டி தொழிற்பேட்டை தொழிலாளர் குடியிருப்பு என்பது தொழிலாளர்களுக்கு உரியது. அதில் ஒரு தொழிலாளியின் மகள் என்று மா.சுப்பிரமணியனின் மனைவி காஞ்சனா பெயரில் ஒரு குடியிருப்பை பெற்றார். அதற்காக தன்னுடைய சொந்த மனைவியை, வேறு ஒருவரது மகள் என்று போலியாக ரேஷன் கார்டு வாங்கி ஆதாரம் சமர்ப்பித்துள்ளார்.

அந்த இடத்தில் உடனடியாக 22.5 லட்சம் ரூபாய் அளவுக்கு பெரிய பங்களா கட்டியும் விட்டார். அது மட்டுமின்றி, அந்த பங்களாவுக்கு தன்னுடைய பவர பயன்படுத்தி, அந்த வீட்டுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரியும் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டார். அந்த இடம் சிட்கோவுக்கு சொந்தமானது எனும்போது, அங்கே  வாடகைக்குத்தான் குடியிருக்க முடியுமே தவிர, சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், அந்த இடத்தை சொந்தம் கொண்டாடினார் மா.சுப்பிரமணியம்.

அது மட்டுமின்றி, 2016 தேர்தலில் நிற்கும்போது அதனை தன்னுடைய மனைவியின் சொத்தாகவும் காட்டியிருக்கிறார். இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்துக்குப் போய்விட்டது. கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் 4,500 சதுர அடி நிலத்தில் கதவு எண் 3 மற்றும் 4_ல் சுமார் 1,650 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருக்கும் அந்த வீட்டின் உண்மையான உரிமையாளர்கள் யார் தெரியுமா?   தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி (சிட்கோ) நிறுவனத்தால் எம்.ஆர்.எலெக்ட்ரானிக் கம்பெனிக்கு இந்த இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

அந்நிறுவனம் தனது தொழிலாளர்கள் கமலநாதன் மற்றும் கண்ணன் என்பவர்களின் குடியிருப்புக்காக அந்த இடங்களை ஒதுக்கி உள்ளது. இவர்களின் கண்ணன் என்பவரது ஒரே மகள் என்று தன்னுடைய  மனைவி காஞ்சனாவைக் குறிப்பிட்டு பொய்யான ஆவணங்கள் தாக்கல் செய்து, அதனை சொந்தமாக்கிக்கொண்டார். உண்மையிலே சுப்பிரமணியத்தின் மனைவி காஞ்சனாவின் நிஜ அப்பா பெயர் சாரங்கபாணியாகும். 

ஆக, இந்த விவகாரத்தில் சொத்து ஆக்கிரமிப்பு, போலியான டாக்குமென்ட்ஸ் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்று ஏகப்பட்ட சிக்கல் வருவதால் நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுப்பதற்குத் தயங்கியது. இப்போது விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனையுடன் இப்போது உயர் நீதிமன்றம் அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் மா.சுப்பிரமணியம் தப்பிக்கமுடியாத அளவுக்கு மாட்டியிருக்கிறார். அவர் செய்த ஊழலில் இது ஒன்றுதான் வெளியே வந்திருக்கிறது, இன்னமும் ஏராளமாக இருக்கிறது என்கிறார்கள். ஆக, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் முன்னர் ஸ்டாலின் இவரை கட்சியில் இருந்து அனுப்பிவிடுவது தி.மு.க.வுக்கு நல்லது. செய்வாரா ஸ்டாலின்?