வரும்2021ல் முதல்வர் ஸ்டாலின்தானாம்! மகாயோகி நித்தியானந்தா ஸ்வாமிகளே சொல்லிட்டாங்கோ!

ஸ்டாலின் கேள்விப்படும் செய்திகள் எதுவுமே நல்லதாக இல்லை என்பதுதான் சமீபகால நிலைமை. உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அவர் எடுத்த என்னென்னவோ நடவடிக்கைகளை எல்லாம் உச்ச நீதிமன்றம் காலி செய்துவிட்டது.


இந்த நேரத்தில் ஸ்டாலின் சந்தோஷப்படும் வகையில் ஒரு நல்ல தகவல் சொல்லியிருக்கிறார் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா. ஆம், அன்றாடம் ஒரு வீடியோ வெளியிட்டு நம் நாட்டையே கலங்கடித்து வருகிறார் நித்தி.

கைலாசா என்று நாட்டில் இருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார் நித்தி. ஈக்குவாடாரில் எந்த தீவையும் நித்தியானந்தா வாங்கவில்லை என்று அந்த நாடு பல்டியடித்துவிட்ட நிலையில், கைலாசா என்பது ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் கிடையாது. எல்லையில்லாத உலகம் என்று சமாளித்திருக்கிறார் நித்தி.

அந்த வீடியோவில்தான், 2021ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருவார் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். மீனாட்சி அருளால் இது நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நித்தி சொல்லியிருப்பது நல்ல விஷயம் என்றாலும், அவரே ஒரு டுபாக்கூர், அவர் சொல்வது எப்படி நடக்கும் என்று யோசித்து வருகிறாராம் ஸ்டாலின்.

ஏதோ, இவர் ஒருத்தராச்சும் சொன்னாரேன்னு சந்தோஷப்படுங்க ஸ்டாலின்.