அமித் ஷாவை சந்திக்க டெல்லியில் காத்திருந்தார் ஸ்டாலின்! டிடிவி வெளியிட்ட ஷாக் தகவல்!

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கூட்டணி மட்டுமல்ல தமிழ்நாடு நலன் இந்திய மக்களின் நலனுக்காக அவர்களோடு இயற்கையான கூட்டணி அமைத்துள்ளோம் என டிடிவி கூறியுள்ளார்.


சென்னையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து டிடிவி பேசினார். அப்போது, கூட்டணி என்றால் நாம் இயற்கையாக எந்த ஒரு பேரமும் இல்லாமல் அர்சியலை தாண்டி  தமிழ்க மக்களின் நலனுக்காக அமைப்பட்ட கூட்டணி. அவர்கள் வீடு வீடாக சென்று ஜெ படத்தை பையில் வைத்து கொண்டு . ஜெ படத்தை சட்டமன்றத்தில் திற்க்ககூடாது , நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளோடும் கூட்டணி வைத்துள்ளார்கள்.

ஆளுநரை சென்று பார்த்து புகார் அளித்தவர்கள், நிர்வாகம் என்றால் என்ன என்று தெரியுமா என்று சொன்னவர்கள் வெக்கம் கெட்டவர்கள் என்றெல்லாம் சொன்னவர்களோடு அவர்கள் வீட்டிலேயே உணவு சாப்பிட்டு அவர்கள் சொன்னதை உண்மை என நிருப்பித்துளார்கள். மானங்கெட்ட கூட்டணி என்று நிரூபித்துள்ளார்கள்.

இன்னொரு கூட்டணி சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என்றும் எங்களை விட்டால் மாற்று இல்லை என்றும் திமுக தலைவர் ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக என அவரது தந்தை போல ஸ்டாலின் பேசினார். அதை அவர்களோடு உள்ளவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை.

இஸ்லாமிய சகோதரர்கள் சிலரை வைத்து சிறுபான்மை மக்களை குழப்புகிறார்கள். எப்படியும் சிறுபான்மை மக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கிறார்கள். காங்கிரஸ் , பாஜக, கம்யூனிஸ்ட் தமிழகத்தில் தனித்து நின்று வெல்ல முடியாது. காவேரி பிரச்சனை முல்லை பெரியாறு பிரச்சனையில் நமக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

வாஜ்பாய் மறைவிற்கு சென்று காத்திருந்து அமித்ஷா வை பார்த்து ஸ்டாலின் அவரது தந்தை நினைவேந்தல் கூட்டத்திற்கு அழைத்து பெயரையும் பத்திரிக்கையில் போட்டுவிட்டு அவர் வரவில்லை என்றதும் நான்கு மாநில தேர்தலில் ராகுல் வென்ற பிறகு தான் அவர் துதிபாட ஆரம்பித்தார் ஸ்டாலின் .

கணக்கு பாடத்தில் வேண்டுமானால் 7+3 பத்து என்று வரும் தேர்தலில் 7+3 பூஜ்ஜியம் என்று தான் வரும்.