டாக்டர்கள் அட்வைஸ்! பிரச்சாரத்தில் சுணக்கம்! ஸ்டாலின் உடம்புக்கு என்ன ஆச்சு?

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பம்பரமாக சுழன்று ஸ்டாலின் தற்போது பிரச்சாரத்தில் சுருக்கமாகவே இருப்பதாக திமுகவினரே கிசுகிசுக்கிறார்கள்.


கடந்த 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மு க ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரத்தை யாரும் மறந்து விட முடியாது. ஒரு நாளைக்கு 15 இடங்களில் மு க ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தான் யாரும் எதிர்பாராத வகையில் திமுக வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இதற்கு மு க ஸ்டாலின் பிரசாரம் தான் காரணம் என்று கருதி அப்போது அவருக்கு துணை முதலமைச்சர் பதவியைக் கொடுத்தார் கருணாநிதி.

இதன்பிறகு 2011 2014 2016 தேர்தல்களில் திமுக வெற்றி பெறவில்லை என்றாலும் ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதிலும் 2016ஆம் ஆண்டு தேர்தலுக்காக அவர் மேற்கொண்ட நமக்கு நாமே பிரச்சாரம் அனைத்து தரப்பையும் சென்றடைந்தது.

நமக்கு நாமே பிரச்சாரத்திற்காக அதிகாலையில் எனும் ஸ்டாலின் இரவு வரை பம்பரமாகச் சுழன்றார். இதனால்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்தாலும் கூட 89 இடங்களில் வெற்றி பெற முடிந்தது.

இப்படி சுமார் நான்கு தேர்தல்களில் பம்பரமாக சுழன்று ஸ்டாலின் தற்போது தலைவராக பதவியேற்ற பின் நடைபெறும் முதல் தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு பிரச்சாரம் செய்யவில்லை என்று திமுகவினர் வருத்தத்தில் உள்ளனர். திருவாரூரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்டாலின் பிரச்சாரத்தை.

காலையில் எழுந்ததும் ஒரு இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்றார் ஸ்டாலின் அங்குள்ளவர்களிடம் வாக்கு சேகரித்து விட்டு பிறகு மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்து ஓட்டு கேட்டார். அதன்பிறகு திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார் ஸ்டாலின்.

அதே நாள் இரவு தஞ்சை பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். திருவாரூரிலிருந்து தஞ்சை வரும் வழியில் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படி எங்கும் ஸ்டாலின் பிரச்சாரத்தை மேற்கொள்ள வில்லை.

அதிலும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் தான் பிரச்சாரத்தை முற்றிலுமாக தவிர்த்து வருகிறார். முழுக்க முழுக்க பொதுக்கூட்டம் வகையிலான பிரச்சாரத்தை மட்டுமே ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார்.

இதற்கு காரணம் ஸ்டாலின் உடல்நிலைதான் என்கின்றனர். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் இருந்தது போன்ற உடல் நிலை கூட ஸ்டாலினுக்கு தற்போது இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் டாக்டர்களும் கூட ஸ்டாலினை உடலை வருத்தி எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால்தான் வழக்கமான வேன் பிரச்சாரத்திற்கு குட்பை சொல்லிவிட்டு ஸ்டாலின் பொதுக்கூட்ட பாணி பிரச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளார்.