ரஜினி பேச்சுக்கு ஸ்டாலின் கிண்டல்..! சீமானை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா ரஜினி?

ரஜினி என்ன பேசினாலும், அதை வில்லங்கமாக மாற்றுவதற்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இன்று கமல்ஹாசனை விட மோசமாக எல்லோருடைய தலையையும் சுற்றும் வகையில் பேசிவிட்டுப் போய்விட்டார் ரஜினி.


அதாவது, கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்காமல், பூடகமாகத் தெரிவித்துவிட்டார். அது ஏன் அப்படி சொல்லவேண்டும் என்பதற்குப் பின்னேயும் ஒரு லாஜிக் இருக்கிறது. 

ஆம், அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை முதல் நாளில் ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து டிக்கெட் வாங்குவதற்கு ஆட்கள் வேண்டுமே, அதனால்தான் இப்படி தலைசுத்தும் அளவுக்குப் பேசினார் என்று சொல்கிறார்கள்.

இந்த நிலையில், ரஜினி பேச்சைக் கேட்டு ஸ்டாலின் செம ஜாலியாகிவிட்டாராம். ரஜினி இனிமேல் அரசியலுக்கு வரமாட்டார். அதனால், அவர் ஆட்களில் இளைஞர்கள் யாராவது இருந்தால், அப்படி யாரும் இருக்க மாட்டாங்க, அவங்களை மட்டும் நம்ம கட்சிக்கு இழுத்துப் பாருங்கப்பா என்று கிண்டல் செய்தாராம்.

அதைவிட, சீமான் கேலிதான் பெரிதாக இருக்கிறது. ரஜினி ஆசைப்படுவது போன்றுதான் நான் கட்சி நடத்திவருகிறேன். ரஜினிக்கு நன்றி என்று தெரிவித்து இருக்கிறார். அதாவது சீமானை முதல்வர் வேட்பாளராக ரஜினி அறிவிக்க வேண்டுமாம்.

சீமான் கேட்பதும் நியாயம்தான். இளைஞனாகவும், திறமைசாலியாகவும் இருக்கிறார். விஜயலட்சுமி விவகாரத்தை மட்டும் ரஜினி சரிக்கட்டிவிட்டால், அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிடலாம்.