ஸ்டாலின் ஒரு விஷக்கிருமி! அதை அழிக்கும் மண்புழு நான்! எடப்பாடியில் தாறுமாறு பிரச்சாரம்!

தன்னை புலி என்று விமர்சித்து வந்த முக ஸ்டாலினுக்கு விஷக்கிருமி பிரச்சாரம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் மு க ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். முதலமைச்சர் பதவியை வாங்குவதற்காக ஒரு புழுவைப் போல் எழுந்து சென்று சசிகலா காலில் விழுந்து தாகவும் தற்போது முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக மோடியிடம் ஒரு புழுவைப் போல் நடந்து கொள்வதாகவும் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார்.

இந்த விமர்சனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான பதிலளித்து ஸ்டாலின் வாயை அடைத்து உள்ளார். இதுகுறித்து தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;

ஸ்டாலின் என்னை குழு என்று விமர்சித்து வருகிறார். ஆம் நான் புழுதான் ஒப்புக்கொள்கிறேன். அதுவும் நான் மண்புழு. மண்புழு விவசாயிகளுக்கு நண்பன் என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் விவசாயிகளுக்கு நண்பன் என்பதை தெரிவிக்கும் வகையில் தான் என்னை ஸ்டாலின் மண்புழு என்று விமர்சித்து வருகிறார். ஆனால் ஸ்டாலினுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மண்புழு விவசாய நிலத்தில் உள்ள வைரஸ்களை அழிக்கும் சக்தி உடையது. அந்த வகையில் நீங்கள் ஒரு விஷக்கிருமி.

உங்களை அழிக்கும் மண்புழு நான். அதாவது மு க ஸ்டாலின் விஷக்கிருமி என்றும் அந்த விஷக்கிருமி அளிக்கும் மண்புழு நான் என்றும் கூறி திமுக தரப்பிற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.