ஸ்டாலின் கையில் சொந்தத் தொழில் இருக்கு! வைரலாகும் தறி நெய்யும் புகைப்படம்!

ஜூன் 3ம் தேதி தி.மு.க. ஆட்சி அமைக்கவேண்டும் என்று ஸ்டாலின் உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கிறார். அதனால் இப்போதே யார் யாருக்கெல்லாம் தமிழகத்தில் மந்திரி பதவி என்று அறிவாலயத்தில் ஜாலி விவாதமே நடந்துகொண்டு இருக்கிறது.


இந்த நிலையில் இன்று திருப்பரங்குன்றம்  இடைத்தேர்தல் பிரசாரத்துக்குப் போன ஸ்டாலின், ஒரு தறி நெய்பவரின் வீட்டுக்குள் நுழைந்து, தறி நெய்வது போன்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம்தான் இப்போது வைரலாக பரவி வருகிறது.

ஆட்சி இல்லேன்னா என்னடா, பதவி வரலைன்னா என்னடா, எங்க தன்மானத் தலைவனுக்கு கைத்தொழில் ஒண்ணு இருக்குடா, அதை வைச்சு பொழைச்சுக்குவான் என்று தி.மு.க. தொண்டர்கள் போடுவது போன்று மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

இதற்கு பதிலடி கொடுப்பதற்காக தி.மு.க. ஐ.டி. விங்க், ‘தொழிலுக்கு மரியாதை கொடுப்பவர் எங்க தலைவர்தான், நீங்க டயரை நாக்காலே சுத்தப்படுத்துபவர்கள்’ என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள். எப்படியோ ஸ்டாலின் பிரசாரம் சூடு பிடிச்சா சரிதான்.