ட்விட்டருக்கு வந்த 4ம் கலைஞர்! ஸ்டாலின் குடும்பத்தின் அடுத்த வாரிசு!

டுவிட்டருக்கு வந்த நான்காம் கலைஞர்… வெளுத்துவாங்கும் நெட்டிசன்கள்


கருணாநிதி குடும்பத்தில் கிட்டத்தட்ட எல்லோரும் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், சமீபத்தில் டுவிட்டர் கணக்கு தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பனுக்கு தி.மு.க.வினரிடம் வரவேற்பும், நெட்டிசன்களிடம் இருந்து கடும் எதிர்ப்பும் கிடைத்துள்ளது.

கருணாநிதி குடும்ப உறுப்பினர்களில்  மு.க.முத்து, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, கனிமொழி, முரசொலி மாறன், முரசொலி செல்வம், கலாநிதி மாறன், தயாநிதி மாறன், அறிவுநிதி, தயாநிதி, உதயநிதி, அருள்நிதி போன்ற அனைவரும் அரசியல் களத்தில் குதித்துவிட்டனர்.

இந்த நிலையில் அடுத்த தலைமுறையாக இன்பன் உதயநிதியும் டுவிட்டர் கணக்கு தொடங்கவே நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர். இப்போதே களத்தில் இறங்கினால்தான், சின்ன வயதில் இருந்தே அரசியல் களத்தில் இருப்பதாக சொல்லிக்கொள்ள முடியும் என்றும், நான்காம் கலைஞரை வரவேற்க காத்திருக்கிறோம் என்றும் பதிவு போட்டிருக்கிறார்கள்.

அதேபோன்று, ‘நீயாவது துண்டு சீட்டு வைச்சிக்காம படிச்சுட்டு வாப்பா’ என்றும், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றும் போட்டு கலாய்த்திருக்கிறார்கள்.

இதெல்லாம் பார்த்தா முடியுமா, நீங்க கலக்குங்க இன்பன்