ஸ்டாலினுக்காக மருத்துவர் பதவியை துறந்த அஞ்சுகம்! மீண்டும் கண்டு கொள்ளாத பரிதாபம்!

அஞ்சுகம் பூபதியை மறந்துவிட்டு நீலமேகத்தை தஞ்சை வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்துள்ளது அஞ்சுகம் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த முறை போட்டியிட்ட அஞ்சுகம் பூபதி என்பவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு நீலமேகம் என்பவரை வேட்பாளராக  அறிவித்துள்ளார் ஸ்டாலின்.

தேர்தலில் நிற்பதற்காக அரசு டாக்டர் வேலையை உதறியவர் அஞ்சுகம். இதுவே கலைஞர் இருந்திருந்தால் கை விட்டிருக்கமாட்டார் அஞ்சுகத்துக்குத்தான் சீட் கிடைத்திருக்கும் என புலம்பி வருகின்றனர் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

 கடந்த முறை வாய்ப்பளிக்கப்பட்டும் அஞ்சுகத்தால் வெற்றி பெறமுடியவில்லை. இதன் காரணமாகவே வேட்பாளரை மாற்றியிருப்பதாக ஸ்டாலின் தரப்பு கூறுகிறது.

ஆனால் தேர்தலில் நிற்க வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவர் பதவியை அஞ்சுகம் ராஜினாமா செய்ததாகவும் தற்போது அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் பரிதாபத்துடன் கூறுகின்றனர்.