பெண் ரிசப்னிஷ்டை தகாத இடத்தில் தொட்ட பார் ஓனர்! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

மும்பையில் உணவக மேலாளர் ஒருவர் அங்கு பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியரிடம் அது மீறியது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்


பாந்திராவில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷப்சனிஸ்டாக பணியாற்றிய அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட உணவக மேலாளர் நேரில் பேச அழைத்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் அந்தப் பெண் நட்பு ரீதியாக அவரை சந்திக்கச் சென்றார். 

அப்போது பாந்திராவில் உள்ள பாண்ட்ஸ்டாண்ட் எனப்படும் நீண்ட கடற்கரை நடை பாதைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்ற மேலாளர் தொடக்கூடாத இடங்களில் தொட்டு அத்துமீறியதாக கூறப்படுகிறது.

அப்போது தனக்கு அவரும் அவர் மீது நெருக்கமான எந்த விதமான உணர்வும் இல்லை என்றும் நட்பு ரீதியாக வந்ததாகவும் கூறிய போதும் அதனை காதில் காதில் வாங்காமல் அந்த நபர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  மேலும் பெண்ணை தொடக்கூடாத இடங்களில் தொட்டு அத்துமீறியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அந்தப் பெண் தனக்கு நேர்ந்தது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார் . இது குறித்து மறுநாள் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர்.

தான் வேலையில்லாமல் இருந்ததாகவும் இந்நிலையில்  அந்த நபர் அழைத்ததை வாய்ப்பாகக் கொண்டு வேலை பெறும் நோக்கில் அவரை சந்திக்க சென்றதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்