பத்தரை அடி உயரம்..! பிரமாண்ட தந்தம்..! துப்பாக்கி ஏந்திய ராணுவ பாதுகாப்பு..! கெத்தாக வலம் வரும் நடுங்குமவா ராஜா யானை! ஏன் தெரியுமா?

கொழும்பு: 24 மணிநேரமும் பலத்த பாதுகாப்புடன் நடமாடும் யானையை பற்றித்தான் இந்த செய்தியில் படிக்கப் போகிறீர்கள்.


ஆம், இலங்கையை சேர்ந்த நடுங்கமுவா ராஜா (65) என்ற யானைக்குத்தான் துப்பாக்கிய ஏந்திய பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இலங்கையிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட, 10.5 அடி உயரத்திலான கம்பீரமான யானை இதுவாகும்.

இந்த யானை, புத்த மதச் சடங்குகளில் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது. குறிப்பாக, புத்தரின் புனித பல் உள்ளதாகக் கருதப்படும் ஆலயத்தில் நடக்கும் நிகழ்வுகளில், இந்த யானைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. கம்பீரமான 100 யானைகளை வைத்து, பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை அந்த நிகழ்வின்போது நடத்துவதும் வழக்கம்.

இதற்காக, 90 கிலோ மீட்டர் வரை ராஜாவை நடத்தியே அழைத்துச் செல்வார்கள். இத்தகைய முக்கியத்துவம் கொண்ட கம்பீரமான ராஜா, சாலை விபத்துகளில் அடிபட வாய்ப்புள்ளது என்பதாலும், யாரேனும் அதனை மத ரீதியான பழிவாங்கலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இலங்கை அரசு சந்தேகிக்கிறது.

இதன் அடிப்படையில், யானை ராஜாவுக்கு, துப்பாக்கி ஏந்திய ஆர்மி வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தியுள்ளது. சமீபத்தில்தான், இலங்கையில் இருப்பதிலேயே மிகவும் வயதான திக்ரி (70 வயது) என்ற யானை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.