கனடா நாட்டில் புற்றுநோய் நிபுணராக பணியாற்றி வந்த தீபா சுந்தரலிங்கம் என்ற இலங்கை தமிழ் பெண் மருத்துவர் நோயாளி உடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் தனது உரிமத்தை இழந்தார்.
சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் இளம் தமிழ் பெண் மருத்துவர் செய்த செயல்! நாடு முழுவதும் அதிர்ச்சி!

தனது வீட்டிலும் மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் பலமுறை அவருடன் பாலியல் உறவு கொண்டதாக குறிப்பிட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டதாக கூறி அவரது உரிமம் பறிக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியவரின் குரல் மட்டுமே உரத்து ஒலித்த நிலையில் தீபா மௌனமாகவே இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தனது மவுனத்தை கலைத்து இருக்கிறார் விசாரணையின்போது குற்றச்சாட்டின் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி அவமான உணர்வு ஆகியவற்றின் காரணமாக மௌனமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் தனக்கு ஆதரவான ஆவணங்களை தாக்கல் செய்துள்ள அவர், நோயாளியை தான் பாலியல் உறவுக்கு அழைக்க வில்லை என்றும் ஆபாச செல்பிகளை அனுப்பவில்லை என்றும் கூறியுள்ளார். தன்னை உணர்வு ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு தான் பலியாகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தான் கூறும்படி நடந்து கொள்ளாவிட்டால் மருத்துவ கவுன்சில் புகார் அளிக்கப்போவதாக தன்னை மிரட்டி நோயாளி தன்னை செல்ஃபிக்களை அனுப்ப செய்ததாகவும் பின்னர் அந்த செல்பிகளை வெளியிடப் போவதாக மிரட்டியே தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார்.