இனி ஸ்ரீஹரிகோட்டா இல்லை..! நம்ம தூத்துக்குடி தான்..! இஸ்ரோ எடுத்த முடிவு..! தமிழகம் கொடுத்த வடிவம்..!

தூத்துக்குடியில் இஸ்ரோ சார்பாக அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு, நிலம் தர தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.


இத்தகவலை தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ளார். மதுரை வேலம்மாள் காலேஜில் பிளஸ் டூ மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை அவர் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போதுதான் மேற்கண்ட விசயத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், ''பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், வேலைவாய்ப்பு பெறவும் பலவித பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.அதற்கு தமிழக அரசு அக்கறை செலுத்தி வருகிறது. நம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயியாக பிறந்தவர்.

இன்றைக்கு முதல்வராக உள்ளார். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதுதவிர, தூத்துக்குடியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்க, நிலம் தருவதற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது,'' என்றார்.  

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக, தென் தமிழக மக்கள் வலியுறுத்திவருகின்றனர். அதன் அடிப்படையில், இந்த திட்டத்திற்கு நிலம் தர தமிழக அரசு முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.