என்னுட்ட பணம் இல்ல! அதான் இப்டி டிரஸ் போடுறேன்! பிரபல நடிகையின் மகள் ஷாக் தகவல்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் முதல் மகளாகப் பிறந்தவர் ஜான்வி கபூர்.


இவரது தந்தை போனி கபூருக்கு ஏற்கனவே திருமணமாகி அர்ஜுன் கபூர் என்ற ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் மிக தீவிரமாக நடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அப்படி இருந்தாலும் இவர் சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை ஆவார்.

அவ்வப்போது தனது அம்சமான பல படங்களை பதிவு செய்து ரசிகர்களிடையே கிளாப்ஸ் வாங்கி வருகிறார் ,சமீபத்தில் கூட தான் ஜிம்மிற்கு செல்வது போல் ஒரு படத்தை வெளியிட்டார். அதற்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு இருந்தது. அதனை தாண்டி சமீபத்தில் சிவப்பு கலர் ஆடையை அணிந்து இதுபோல ஒரு படு கவர்ச்சியான போட்டோ ஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர் இந்நிலையில் இது குறித்து பேசிய ஜான்வி கபூர்.

மக்கள் ஏன் இதனை மிக கடுமையாக எழுதி விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் இன்னும் பிரபலமாகவில்லை. சொல்லப்போனால் தினமும் ஒரு ஆடை அணியும் அளவிற்கு கூட நான் இன்னும் சம்பாதிக்கவில்லை. நான் எங்கு சென்றால் அவர்களுக்கு என்ன? என்னுடைய வேலையைச் செய்யப் போகிறேன். அங்கெல்லாம் கூட்டம் கூடி என்னுடைய புகைப்படங்களை எடுக்கிறார்கள் ஆனால் நான் இன்னும் அந்த அளவிற்கு சம்பாதிக்கவில்லை என்று ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார் ஜான்வி கபூர்.