தமிழர்களின் எதிரி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு இலங்கையில் சிறப்பு பதவி!

விடுதலைப் புலிகளை கொடுமையாக விமர்சனம் செய்துவந்தவர் முத்தையா முரளிதரன். அதனாலே தமிழராக இருந்தாலும் இலங்கை அணியில் இடம் பிடிக்க முடிந்தது. போருக்குப் பிறகும் அவருக்கு தமிழர்கள் மீதான வன்மம் குறையவே இல்லை.


அதனால் அவரை கௌரவிக்க எண்ணிய இலங்கை அரசு புதிய பதவி கொடுக்க முன்வந்துள்ளது. ஆம், வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட இருக்கிறார். 

முத்தையா முரளிதரனை நேற்று தொலைபேசியில் அழைத்து பேசிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே, வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக இலங்கை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பே வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரனை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டபோதும் முத்தையா முரளிதரன் நாட்டம் காட்டவில்லை. ஆனால், வடக்கு ஆளுநர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதியே வலியுறுத்தியுள்ளதாம், பதவியை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டாராம்.