கொரோனா காய்ச்சலுக்கு பொரித்த மீனுடன் சுடசுட ஸ்பெசல் மீல்ஸ்..! எந்த ஹாஸ்பிடலில் தெரியுமா?

கொரனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்தியர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் விசேஷ உணவு வழங்கப்படுகிறது


கொரனா பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கேரள மருத்துவமனைகளில் சப்பாத்தி, பொரித்த மீன் உள்பட விசேஷ உணவு விநியோகம் செய்யப்படுகிறது. உலகெங்கும் அச்சுறுத்தி வரும் கொரனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அந்த நாடுகளில் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல் கேரளாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு விசே‌ஷ உணவுகள் வழங்கப்படுகிறது. அதாவது காலை உணவாக தோசை, சாம்பார், 2 அவித்த முட்டை, 2 ஆரஞ்சு பழங்கள், டீ மற்றும் குடிதண்ணீர் வழங்கப்படுகிறது.

காலை 10.30 மணிக்கு பழச்சாறு வழங்கப்படுகிறது. மதியம் சப்பாத்தி, பொரித்த மீன் வழங்கப்படுகிறது. மாலையில் பிஸ்கெட், டீயும், இரவு அப்பம், 2 வாழைப்பழம் வழங்கப்படுகிறது. இதேபோல் கொரனா பாதிப்பு ஏற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு காலை 2 அவித்த முட்டை, சூப், பழச்சாறு வழங்கப்படுகிறது.

பின்னர் அன்னாசி பழச்சாறும், பகல் உணவாக ரொட்டி, வெண்ணை மற்றும் பழங்களும், இரவில் ரொட்டி, முட்டை பொரியல், பழங்கள் வழங்கப்படுகிறது.