நடிகையுடன் தகாத உறவில் இருந்த டைரக்டர்! மனைவியுடன் சேர்ந்து வாழ உத்தரவிட்ட நீதிமன்றம்! ஏன் தெரியுமா?

சினிமா இயக்குனர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தென்கொரியாவைச் சேர்ந்தவர் ஹாங் சாங் சூ. 58 வயதாகும் இவர், பிரபல சினிமா இயக்குனர் ஆவார். இவர், சக நடிகையான கிம் மின் ஹீ என்பவருடன் நெருங்கிய உறவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதற்காக, தனது மனைவியை விவாகரத்து செய்வதாக, நீதிமன்றத்தில் 2016ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

ஹாங் சாங், 1985 முதல் தன்னை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வருவதால், திடீரென விவாகரத்தை ஏற்க முடியாது என்று, அவரது மனைவி தெரிவித்தார். இதன்பேரில், சியோல் குடும்ப நல நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. ஆம். பாதிக்கப்பட்ட பெண்தான், விவாகரத்து அல்லது நஷ்ட ஈடு கேட்க உரிமையுள்ளவர் என்றும், கணவன் என்பதால் மனைவியை  இஷ்டம்போல நடத்துவதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, ஹாங் சாங்கின் விவாகரத்து மனுவையும் நிராகரித்த நீதிமன்றம், இதன்பேரில் உரிய நஷ்ட ஈடு வழங்கவும் அவருக்கு உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து கேட்ட கணவனுக்கே, நீதிமன்றம் ரிவீட் அடிப்பதுபோல இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது, தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.