சிறுமிகளையும், பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த பின் கொலை செய்து தன் வீட்டை சுற்றி அவர்களின் உடல்களை இளைஞர் ஒருவர் புதைத்துள்ள சம்பவமானது தென்னாப்பிரிக்க நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டை சுற்றிலும் இளம் பெண்கள் உடல்கள்! சைக்கோ இளைஞனின் விபரீத ஆசை! அதிர வைக்கும் சம்பவம்!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மே மாதம் இளம்பெண் ஒருவர் மாயமாகி இருந்தார். அவருடைய பெயர் டோக்கி டக்காலா. இந்த வழக்கை எடுத்து நடத்திய காவல் துறையினர் மாயமான பெண் இறுதியாக ஜூலியஸ் என்பவரின் வீட்டிற்கு சென்றதாக கண்டறிந்தனர். ஜூலியஸிடம் விசாரணை நடத்த அவர் வீட்டுக்கு சென்றனர். ஆனால் ஜூலியஸ் அங்கிருந்து தப்பித்து விட்டார்.
மூன்று வாரங்கள் கழித்து ஜூலியஸ் என் தாயாரே அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். காவல்துறையினர் ஜூலியஸ் உடன் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
ஜூலியஸ் பேஸ்புக் மூலமாக டோக்கி என்ற பெண்ணிடம் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து உடலுறவு மேற்கொண்டுள்ளார். இதற்கு அந்தப் பெண் பணம் கேட்க அப்போது இருவருக்குமிடையே பலத்த சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜூலியஸ் அவரை கொலை செய்து வீட்டின் வெளியே புதைத்துள்ளார். காவல்துறையினர் வீட்டை சுற்றி சோதனை நடத்தியதில் மேலும் 4 பெண்களின் உடல்கள் புதைந்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
அவரின் வீட்டை சுற்றி எடுக்கப்பட்ட பிணங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் இடையூறு செய்ததால் தடயங்கள் சில அழிந்துள்ளன என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.