கூண்டில் இருந்து தப்பிய 14 சிங்கங்கள்! மரண பீதியில் கிராமம்! எங்க தெரியுமா?

மேற்கு எல்லைப்பகுதியில் பலாபோர்வா நகருக்கு வெளியே கிட்டத்தட்ட 14 சிங்கங்கள் சுற்றி திரிவதாக அந்த பூங்காவின் சார்பில் அறிவிக்கபட்டதை அடுத்து பொதுமக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்..


தென்னாபிரிக்காவின் க்ரூகர் தேசிய பூங்காவுக்கு அருகே 10 க்கும் மேற்பட்ட சிங்கங்கள் நடமாட்டம் காணப்படுவதாக வடக்கு லிம்போபோ மாகாணத்தின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதையொட்டி அதிகாரிகள் மக்கள் அதிகம் கூடும் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

அரசு மற்றும் பூங்கா அதிகாரிகள் ஒரு சிலர் சிங்கங்களில் சில பிடிக்கபட்டதாகவும் மீண்டும் பூங்காவிற்கு கொண்டு செல்லபட்டதாகவும் தகவல் அளித்தனர். ஆனால் பூங்கா பிரதிநிதி ஒருவர் இது பற்றி பேசிய போது அந்த தகவலை மறுத்ததோடு அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில நாட்களுக்கு முன்  இரண்டு வயது சிறுவனை சிறுத்தை  கொடூரமாக கொன்ற சம்பவமும் அரங்கேறியதை அடுத்து  மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் மேலும் அவர்களின் பாதுகாப்பிற்க்காக தொடர்ந்து போதுமான நடவடிக்கைகள் எடுக்கபடுவதாக அரசின் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது, எனினும் பாதுகாப்பு கருதி மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல் செய்துள்ளது...