பாதுகாப்பு இல்லாத நிலையில் சோனியா காந்தி குடும்பம்! மோடியின் அதிரடி நடவடிக்கை!

திடீர் திடீரென எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வெளிநாடுகளுக்குச் செல்லும் யுக்தியை ராகுல்காந்தி கடைபிடித்து வருகிறார்.


பாதுகாவல் படைக்கும் தகவல் தரப்படவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டிவந்தது. இந்த நிலையே தொடர்ந்து நிலவுவதால், சோனியா காந்தி குடும்பத்திற்கு சிறப்பு பாதுகாப்பு பிரிவு வாபஸ் பெறுவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளது. அதன்படி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆகியோருக்கான 'இசட்' பிரிவு வாபஸ் பெற உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இசட் பிரிவு பாதுகாப்புப் படைக்குப் பதிலாக, பயிற்சி அளிக்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல். இதனால் ஏகப்பட்ட பணம் மிச்சமாகும் என்று முடிவு செய்திருக்கிறது அரசு.

இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி ஆகியோரை வன்முறைக்கு பலி கொடுத்துள்ள குடும்பத்துக்கு பாதுகாப்பு தேவை என்று காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் இறங்க உள்ளதாம்.